மூன்றாம் ஆண்டு வணிகச் செயலாற்றியல் துறை மாணவி M.N. ஆஷிகா சபானா கிராத் ஓத, தமிழ்த்தாய்வாழ்த்துடன் ஆரம்பமானது. இவ்விழாவில் மாணவப் பேரவைத் தலைவர் மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியமாணவி S.M.B. ஆதம் மஹ்சூமா வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினரும் எம் கல்லூரியின் நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபர்த்தோஸ்மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கொடிப்பாடல் பாடிய பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. உறுதிமொழிகூற, அதனை அனைவரும் வழிமொழிந்தனர்.
இவ்விழாவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S செய்யது அப்துர் ரஹ்மான், துணைச்செயலர்ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), இயக்குநர் முனைவர் திருமதிமெர்சி ஹென்றி M.A., Ph.D. முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கல்லூரி நிர்வாகஉறுப்பினர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினரும் கல்லூரி நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபர்த்தோஸ்விடுதலைப்போரில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் விடுதலை உணர்வையும், தியாகத்தினைப் பற்றியும்கூறியதோடு, இன்றைய சமுதாயத்தினர் நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாட்டுணர்வு, அன்பு, இரக்கம், பெரியோர்க்குக் கீழ்ப்படிதல், விடுதலை வீரர்களின் மன உறுதி ஆகியவற்றை கடைப்பிடித்தொழுக வேண்டும்எனவும் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரிமாணவப் பேரவைச் செயலர் மூன்றாமாண்டு பொருளியல் மாணவி M. பிரியா நன்றியுரை கூற, மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி S. செய்யது அஹமது பாத்திமா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன்விழா நிறைவடைந்தது.
நிலைப்படம் மற்றும் தகவல் : கல்லூரி நிர்வாகம்