காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Internet of Things (IoT) என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு 17.08.2017 அன்று எம் கல்லூரியின் கணிணி துறையும், தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து நடத்தின.
கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில், மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை மாணவி S.A. பவ்ஷான் அப்ரின் கிராத் ஓத, கருத்தரங்கு இனிதே ஆரம்பமானது.
கணிணி துறையின் தலைவி திருமதி N. நேசா ஆக்னஸ் பெலின்டா MCA., M.Phil., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். எம் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தொடக்கவுரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கு சிறப்பாக நடைபெற, எம் கல்லூரிச் செயலர் ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), மற்றும் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
ICT Academyயின் மூத்த பயிற்சியாளர் திரு. M.P. ஜெகதீசன் (M.E) அவர்கள் Internet of Things IoTயின் அவசியத்தையும், உலகத்திலுள்ள அனைத்து பொருள்களும் கணிணியோடு இணைக்கப்பட உள்ள கணிணி துறையின் அபரிதமான வளர்ச்சியை பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் Intel Edison Kit மூலம் சென்சார் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையும், அதை கணிணி ப்ரோகிரோம் மூலம் எவ்வாறு கட்டுபடுத்தப்படுகிறது என்பதையும் செயல்முறை விளக்கமளித்து காட்டினார்.
இக்கருத்தரங்கில் 11 கல்லூரிகளைச் சார்ந்த 95 மாணவியரும், 8 ஆசிரியப் பெருமக்களும், 2 ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கில் எம் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
எம் கல்லூரியில் நிறுவன உறுப்பினர் Dr. வாவு M. வஜீஹா ருமைஜா MBBS., அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபிர்த்தோஸ் அவர்கள் கருத்தரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
தகவல் தொழில் நுட்பத்துறை தலைவி திருமதி J. ஷர்மின் மேரி ஜானகி M.Sc., M.Phil., அவர்கள் நன்றியுரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு கணிணித்துறை மாணவி V.K.M. கதீஜா நஸ்ரின் துஆ ஓத, கருத்தரங்கு நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் : கல்லூரி நிர்வாகம்