இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 52ஆவது செயற்குழு கூட்டம், 13.10.2017 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் தலைமையில்,
பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் [பாதுல் அஷ்ஹாப்] கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மன்றத்தின் அடுத்த (11-ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவ-10 தேதி வெள்ளிக்கிழமையன்று K.F.C.பார்க்- (பழைய ஏர்போர்ட் ரோடு [அல்-நூர் மருத்துவமனை அருகில்) வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இறுதியாக மவுலவி ஹாஃபிழ் நஹ்வி எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
மன்றத்தின் 11-வது பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல்: A.R.ரிஃபாய் (மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)