அமீரகத்தின் அபுதாபியில் இந்திய கலாச்சார மையம் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டதையொட்டி 25-11-2017 அன்று காலை , பத்து கிலோ மீட்டர் தூர நடைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அபுதாபி கார்னிஷ் ஹில்டனில் துவங்கி, மீனாவில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மைய கட்டடத்தில் இந்த நடைப்பயணம் நிறைவு பெற்றது.
ஏராளமான இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டனர்.
ரம்மியமான அதிகாலை வேளையில் , பச்சைப் பசேலென்ற அழகிய கடற்கரையோரத்தில் , மிதமான குளிரில் நட்பு வட்டாரத்தின் புடைசூழ அமர்க்களமாக அமைந்தது இந்நிகழ்ச்சி .
அபுதாபி காவல்துறையின் ஒத்துழைப்பும் கனிவும் மிகுந்த பாராட்டுக்குரியதாக விளங்கியது.
புன்னகை மன்ற வாட்சப் குழுமம் உறுப்பினர்கள் உள்ளிட்ட ,காயல் சகோதரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள் .
நிலைப்படம் மற்றும் தகவல்: A.R. ரிபாயி , புன்னகை மன்ற வாட்சப் குழும உறுப்பினர் .