காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.கே.தைக்கா உமர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் ஹாஜி குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் குளம் செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் குளம் சிப்கத்துல்லஹ் ஹாஜி குளம் முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி குளம் மூஸா நெய்னா ஆகியோரின் சகோதரருமான இவர்கள் ,
குளம் கே.ஏ.எம்.தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான குளம் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ., அல்ஹாஜ் அல்ஹாஃபுழ் குளம் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் ஹாஜி டீ.ஓ.மஹ்மூத், ஹாஜி டீ.ஓ.அய்யூப் ஆகியோரின் மச்சானும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 13-04-2018 வெள்ளிக்கிழமை இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சிறிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்