காயலில் புற்றுநோய் - அருகிலுள்ள ஆலை காரணமா?
டாக்டர்.D.முஹம்மதுகிஸார் M.B.B.S., D.C.H.
சமீபகாலமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில்,புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதன்மக்கள் தொகையின் சாராசரி சதவிகிதத்தைவிட, பலமடங்கு அதிகமாகி வருகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எந்த புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கு ஆட்படாமல், எந்த புற்றுநோய்க்கான அதிக ஆபத்து என்ற Risk Factor இல்லாமல் இருந்தும், அவர்களை புற்றுநோய் அதிகஅளவில், வீரியத்துடன் தாக்கி வருகிறதை பார்க்கிறோம்.
இதற்கு என்ன காரணம் இருக்கும் எனபல அமைப்புகளும் ஆராய்ந்ததில், அனைவரின் கைகளும் அருகில் உள்ள DCW தொழிற்சாலையை நோக்கித்தான் நீளுகிறது.
இதை நம் ஏதோசந்தடி சாக்கில் கூறவில்லை.இந்த தொழிற்சாலையை புற்றுநோய் ஏற்படக்காரணம் என்று, உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், சூழ்நிலை சான்றுகள் (circumstantial evidence) மற்றும் corrobarative evidence எனப்படும் நிலையில், நாம் அந்த தொழிற்சாலையை சந்தேகிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
காயல் பட்டினத்தில்அதிகம் cancer ஏற்படுத்தும் gene என்னும் oncogene இருப்பதாகஅதிகம்அறியப்படவில்லை. ஏனென்றால், இந்த oncogeneஇப்போதைக்கு எந்த பரிசோதனைமூலம் நிரூபிக்க முடியாவிட்டாலும், இந்த oncogene மூலம் ஏற்படும் கேன்சர் அதிகம் ஒரேகுடும்பத்தை சேர்ந்த இரத்தபந்தங்களையும், பரம்பரையையும் பாதிக்கும்.
நாம் அறிந்த வரை காயல்படினத்தில் உள்ள, அதிகமானகேன்சர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களையோ அல்லது பரம்பரையிலோ வரவில்லை என்றே தெரிகிறது. இதனால் மரபியல் காரணமாக இங்கு அதிகம் கேன்சர் காணபடுகிறது என்றவாதம் அடிபட்டுபோகிறது.
இந்த ஊரிலோ அல்லது சுற்றுபுறத்திலோ, carcinogen என்னும் cancer உண்டு பண்ணும் காரணிகளை முக்கியபொருளாகவோ அல்லது கடைநிலைபொருளாகவோ கையாளும் தொழிற்சாலை DCW தவிரவேறு இல்லை.
இந்த ஊரில் ஏற்பட்டுள்ள cancer களில்அதிகம் , நுண்கிருமிகளால் ஏற்படும் cancer அல்ல. அதனால் கிருமிதாக்கத்தினால் கேன்சர் ஏற்படுகிறது என்றவாதமும் நிற்கவில்லை. கிருமியினால் வரும் கான்செர்அனேகமாக கல்லீரல்புற்று மற்றும் கருப்பை வாய்புற்று மட்டுமே. இரண்டுமே இங்கு மிகமிகக் குறைவு.
இந்த ஊரில் உள்ள அசைவஉணவு உள்ளிட்ட உணவுபழக்கம் தான் அதிககேன்சர் வரகாரணம் என்றும்கூற முடியாது. இதை எந்த மருத்துவ ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை.இது ஒரு காரணமாக இருந்தால், அதிக கேன்சர் எண்ணிக்கை அரபுநாடுகளில்தான் இருக்கவேண்டும்.
ஊரைசுற்றியோ, சிலபல கிலோமீட்டர் தூரம் வரை, நாம் அறிந்த வரை புற்றுநோயை உண்டு பண்ணும் கதிரியக்கம் expose ஆனதாக சரித்திரம் இல்லை.
'நாங்கள் பலவருடங்களாக இங்கு பணியாற்றி இந்த தொழிற்சாலை குடியிருப்பில் தான் வாழ்கிறோம். பணிஓய்வுக்கு பின்னும் இங்குதான் இருக்கிறோம். அப்படி ஒருசமயம் தொழிற்சாலை மூலம் பாதிப்புஏற்பட்டால், அது முதலில் எங்களை பாதித்துவிட்டுத்தான், காயல்பட்டினம் மக்களை பாதிக்கவேண்டும். நாங்கள் மிக ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். 'இது DCW தொழிற்சாலையில் பணியாற்றி ஒய்வுபெற்ற முன்னாள்பணியாளர்கள் கூறுவதாகும். மேலோட்டமாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், இது நிதர்சனமான உண்மை அல்ல.
ஒரு தொழிற்சாலையில் விபத்தோ அல்லது சுகாதாரப்பாதிப்போ ஏற்பட்டால், அந்த தொழிற்சாலைகக்குள் அல்லது அதனை ஒட்டிவாழும் மக்களை விட, அதனைச்சுற்றி, சற்று தொலைவில் உள்ள ஊர்மக்களைதான் பாதிக்கும்.
இதை போபால் விஷவாயு பாதிப்பில் நம்கண்கூடாக பார்த்தோம். அங்கு union carbide ஆலையில் இருந்த எவரும் methyl isocyanaide வாயுவால் பாதிக்கப்படவில்லை. அதைசுற்றி இருந்த ஏரியாமக்கள்தான் பாதிக்கபட்டர்கள் எனபது உண்மை.. எனவே இந்தவாதமும் அடிபட்டு போகிறது.
இதை வைத்துபார்க்கும் போது DCW தான் இந்தநோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. காரணம், அதுகையாளும் பொருள்களில் சில carcinogen என்னும் cancer உண்டுபண்ணும் காரணிகள் வகையைசார்ந்தது. இந்ததொழிற்சாலை, பலமுறை அரசுவிதி முறைகளை மீறி காற்றிலும், கடலிலும் தனது இரசாயனகழிவுகளை வெளியேற்றியதை ஆதராத்துடன் நாம்பார்த்திருக்கிறோம்.
இதைவைத்து ஒரு circumstantial evidence மற்றும் corroborative evidence ஆகவைத்து, நாம் இந்தகுற்றச்சாட்டை அந்த தொழிற்சாலை மீது வைக்கிறோம்.
பொதுவாக ஒரு தொழிற்சாலை மீது சுற்றியுள்ள மக்களுக்கு அந்த தொழிற்சாலை மீது சுகாதாரரீதியாக அச்சம் ஏற்பட்டால், அந்த அச்சத்தை போக்கும்வரை, தனது உற்பத்தியை நிறுத்திவைப்பது அல்லது மேலும் விரிவாக்கபணிகளுக்கு செல்லாமல் இருப்பது அல்லது முழுவதுமாக அந்த அச்சத்தை போக்குவது அந்த தொழிற்சாலையின் தார்மீக கடமை.
ஆனால்இதில்எதையும்DCWசெய்யவில்லை. மாறாகவெந்தபுண்ணில்வேலைபாச்சுவதுபோல், மேலும்கடலில்அவ்வப்போது, தனதுஅமிலக்கழிவைதிறந்துவிட்டு, நமதுஅச்சத்தைமேலும்அதிகமாக்கியேவைத்துள்ளது.இப்போது, அந்த தொழிற்சாலைகையாளும் பொருள்களில் சில எப்படி cancer உண்டுபண்ணும் காரணிகளாக உள்ளது என்பதை ஒரு சிலஉதாரணத்துடன் பார்ப்போம்.
VINYL CHLORIDE MONOMER
இது PVC, பிளாஸ்டிக் மற்றும் vinyl பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. இந்த VCM காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்து, அது குறுகிய நாளைக்கு ஒரு மனிதன்மீது ஆதிக்கம் செலுத்தினால் மூளைமற்றும்நரம்புமண்டலம் பாதிக்கப்படும். இதனால்தலைவலி, சோர்வு, மயக்கம்வரலாம்.
அதிக நாளைக்கு ஒருமனிதனை இது தாக்கினால் அது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
VCM புற்றுநோயை உண்டுபண்ணும் என்றுநாம் கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் US Environmental Protection Agency (US EPA ) என்னும் சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.
DCW தொழிற்சாலையின் முக்கிய வருவாயே இந்த PVC தயாரிப்பில் இருந்து வருகிறது. இதற்கு தேவையான VCM தூத்துக்குடிதுறைமுகத்தில் இருந்து, Tanker மூலம்ரோடு மார்க்கமாகவே கொண்டு வரப்படுகிறது.
இதே VCM பயன்படுத்தும் பல தொழிற்சாலைகள், இதை துறைமுகத்தில் இருந்து, ரோடுக்கு இந்தரசாயனத்தை கொண்டுவராமல், விசேஷ முறையில் நேரடியாகதுறைமுகம் அல்லது இறக்குமதி செய்யும் இடத்தில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டுசெல்கிறது. ஆனால்அதை DCW பின்பற்றவில்லை.இந்த முறை பின்பற்றினால், நிர்வாகத்திற்கு அதிகம் செலவு ஏற்படும் என்ற ஒரேகாரணம் தான் இருக்க முடியும்.
SYNTHETIC RUTILE -Ilmenite ore
இந்த ரசாயனத்தை, கன்னியாகுமரி மாவட்டம், மற்றும்கேரளா, ஒடிஸாவில் உள்ள சிலபகுதிகளில் உள்ள மண்களில் இருந்து DCW பெறுகிறது. இந்த மண்ணை எப்படி, அங்கிருந்து DCW தொழிற்சாலைக்கு கொண்டுசெல்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த மண், DCW வினரால் process செய்யப்பட்டு இறுதியில் ilmenite தாது கிடைக்கிறது.
பொதுவாக உலகில் பல பகுதிகளில் இந்த மணலை எடுக்க பயன்படுத்தபட்ட மக்களில் பலர் புற்றுநோயாலும், மூளை வளர்ச்சிகுறைவாலும் பாதிக்கப்பட்டதாக பல செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த மணலில் மிககுறைவான அளவில் கதிரியக்கம் இருப்பதாக தெரிகிறது. International Agency for Research on Cancer என்னும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சிநிறுவனம், இந்த carcinogen மணலை ilmenite என்னும் cance rஉண்டுபண்ணும் காரணிகள் லிஸ்டில் வைத்துள்ளது. இது காற்றில் உள்ள ilmenite துகளுக்கு அதிகநாள் expose ஆகும்போது சிளிகோசிஸ் என்னும் நுரையீரல்பாதிப்பு, புற்றுநோய்வரலாம்.
இந்த ilmenite மணலில் குறைந்த அளவில் Free quartz உள்ளதால், இதை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த மணலில் மிக குறைந்த அளவில் தோரியம் மற்றும் Uranium (0.05%குறைவாக) என்னும் கதிரியக்க பொருள்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
இதிலிருந்து குறைந்த அளவில் வெளிப்படும் Alpha மற்றும் Gamma கதிரியக்கம் cancer ஐ உண்டு பண்ணலாம். இதன் அளவு காற்றில் , தொடர்ந்து ஐந்துவருடத்திற்கு மொத்தம்100 milli-seiverts அளவைதாண்டக்கூடாது என்றவிதி உள்ளது. இந்தவிதி இங்குபின்பற்றப்பட்டதா என்று நமக்கு தெரியவில்லை..(ICRP ).
இந்த ILMENITE குறைந்த அளவு கதிரியக்கம் இருப்பதை DCW அதன் இணையதளத்தில் ஒப்புகொண்டுள்ளது.
TRICHLOROETHYLENE
இதுவும் DCW தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஒரு ரசாயனம். இதையும் பல தொழில்சார்ந்த சர்வதேச அமைப்புகள் மற்றும் cancer ஆய்வு சார்ந்த நிறுவனகள் கான்செர் உண்டுபண்ணும் Carcinogen என்று வரையறுக்கிறது.
Potential Chronic Health Effects:
OSHA என்னும் அமெரிக்க அமைப்பான (occupation safety and Health Administration) என்னும் தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரநிர்வாகம், இந்த ரசாயனத்தை Classified (proven) Carcingogen, வரையறுக்கப்பட்ட (நிரூபிக்கப்பட்ட) கான்செர் உண்டுபண்ணும் காரணி என்று கூறுகிறது.
American Conference of Governmental Industrial Hygienists (ACGIH®) என்னும் அரசு தொழில்துறை சுகாதாரத்திற்கான அமெரிக்கமாநாடு என்ற அமைப்பு இதை Classfied5 கேன்சர்காரணி என்றுவரைமுறைப்படுத்துகிறது. இதுபோக இதுகிட்னி, நரம்புமண்டலம், இதயம், கல்லீரல், சுவாசக்குழாய் ஆகியவற்றையும் பாதிக்கும் என்று தெரிவிக்கிறது.
இதுபோக US ஐ சேர்ந்த National Toxicology Program (NTP) என்னும் தேசியநச்சுயியல்திட்டம் "reasonably anticipated to be a human carcinogen." (நியாயமாக எதிர்பார்த்தது போல் இது ஒருமனித கேன்சர் காரணி ) என்று வர்ணிக்கிறது.
மேலும் The International Agency for Research on Cancer (IARC) புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேசஅமைப்பு trichloroethylene is "probably carcinogenic to humans. மனிதனுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது.
மேற் கூறிய ஒரு சில இராசயனத்தால் மனித பாதிப்புகள், அதிலும் குறிப்பாக கேன்சர் பாதிப்பு ஏற்படும் என்று அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளோம்.
எதிலும் நம் சொந்தகருத்தை நுழைக்கவில்லை.மேற்கூறிய காரணங்கள், நாம் அறிந்த விஞ்ஞான கருத்துக்கள் அடிப்படையில், காயல்பட்டினத்தில் உள்ள கான்செர்நோய்க்கு DCW ஒரு காரணமாக இருக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக எண்ணுகிறோம்.
இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமான சில அறிவியல் குறிப்பாகும். நாம் இந்தகுற்றசாட்டை ஓரளவுக்கு அறிவியல், மருத்துவ அடிப்படையிலும், சுற்றுபுறசூழல் சான்றுகள் மற்றும் corroborative evidence மூலம் நிருபித்துவிட்டோம்.
இனியும் DCW வறட்டு வாதங்கள் மூலமும், முகவரி இல்லாத நோட்டீஸ் மூலமும், எங்கள் தொழிற்சாலையால் மக்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்று விதண்டாவாதம் செய்யவேன்டாம்.
இனி DCW என்ன நடவடிக்கை எடுத்து, மக்கள்மனதில் இருந்து இந்த ஐயத்தை நீக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு காயல்பட்டினம் மக்களைமட்டும் அல்ல எல்லா நடுநிலையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல்,தொடர்ந்து சுற்றுசூழலை மாசுபடுத்தி, மக்களை பாதிக்கும் நடவடிக்கை தொடர்ந்தால், சட்டபூர்வமான நடவடிக்கைகளை மத்தியமாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்கிறோம்..
பின்குறிப்பு: கட்டுரையாளர் குழந்தை நலமருத்துவராகவும், EXPERT COMMITTEE on BIOMEDICAL WASTE உறுப்பினராகவும்,MINISTRY OF ENVIRONMENT AND FOREST GOVERNMENT OF INDIA வின்EXPERT APPRAISAL COMMITTEE , MINING (NON COAL ) உறுப்பினராகவும் விளங்குகிறார்.
இந்த ஆக்கம் www.kayalconnection.com கருத்தரங்கம்; என்ற தலைப்பில் நம்மைப் பற்றி நம்மைச் சுற்றி என்ற உட்பிரிவில் இடம்பெற்றிருக்கும்.
நேயர்கள் இக்கட்டுரைக்கான கருத்துக்களை admin@kayalconnection.com என்றமின்னஞ்சல் முகவரியில்பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
( 12-12-2012 )