காயல்பட்டினத்தில் 2011 ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 8,9,10 ஆகிய மூன்று நாட்களில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் தனது 15 ஆம் ஆண்டு இலக்கியப் பெரு விழாவை நடத்தியது. சீருடன் நடந்தேறிய அவ்விழாவில், சமூகத்தில் சாதனைப் புரிந்தோர் சிலருக்கு சேவைச் செம்மல் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருது வழங்கப்பட்டோரில் காயல்பட்டினத்தில் கடந்த 40 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக ,சன்மார்க்கப் பணியாற்றும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வி I.L. நூருல் ஹக் அவர்களும் ஒருவராவார். விருது பெற்ற முதல்வரைப் பாராட்டி கல்வி நிறுவனத்தின் அந்நாள் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் விழா எடுத்து மகிழ்ந்தனர்.
பாராட்டுக்குரியப் பணியாற்றும் முதல்வரை வாழ்த்தி ,அவரிடம் பயின்ற சகோதரர் முஸ்தாக் அஹ்மத் அவர்கள், விழாவில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை சகோதரர் D. சேக் அப்பாஸ் பைசல் அவர்கள் தகவலாக தந்துள்ளார்கள் . அதை மகிழ்வுடன் நேயர்களுக்கு வழங்குகிறோம்.
கவிதைக் குறித்த தங்கள் கருத்தை இதன் கீழ் பதியவும்.