காயல்பட்டினம் தீவுத் தெருவில் அமைந்துள்ள பெண்கள் தைக்காவில் அரூஸுல் ஜன்னஹ் என்ற மகளிர் மார்க்கக் கல்லூரி கடந்த 35 ஆண்டுகளாக மார்க்க சேவையாற்றி வருகிறது.
இந்நிறுவனத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் கல்வி கற்க இணைகிறார்கள். இங்கு படித்து முடித்த ஆலிமாக்கள், ஹாபிழாக்கள் தங்கள், தங்கள் பகுதிகளில் மார்க்க சேவை ஆற்றி வருகிறார்கள்.
இக்கல்விக் கூடம், இதுவரை 352 ஆலிமாக்களையும், 60 ஹாபிழாக்களையும் உருவாக்கி உள்ளது. இங்கு பட்டயம் பெறுபவர்கள் அரூஸிய்யா என அழைக்கப்படுகிறார்கள் .
இந்நிலையில், இவ்வாண்டு 38 ஆலிமாக்கள் 14 ஹாபிழாக்கள் பட்டயம் (ஸனது) பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா 08-10-2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
பட்டமளிப்பு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.
தகவல் உதவி : A.L. நிஜார்