காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலையில் உள்ள அல் அமீன் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியில் வைத்து, காயல்பட்டினம் அரிமா சங்கம் , புன்னகை மன்றம் வாட்சப் குழுமம்,திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம், 15/10/2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், குழந்தைகள் மருத்துவம் , மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் , பொது மருத்துவம் , பல் மருத்துவம் , அறுவை சிகிச்சை மருத்துவம் , எலும்பு மூட்டு மருத்துவம் , புற்றுநோய் மருத்துவம் , மன நல மருத்துவம் , நரம்பியல் மருத்துவம் , பேச்சு மற்றும் செவித்திறன் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த 21 மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர் .
அல்-அமீன் பள்ளியின் 25 ஆவது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது.
தகவல் : பிரசுரம்