காயல்பட்டினம் மஹ்லறாவில் 14-06-2018 இன்று மக்ரிப்க்கு பின் சுன்னத்துல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் , நாளை 15-06-2018 வெள்ளிக்கிழமை 30 ஆவது நோன்பு என்றும், நாளை மறுநாள் 16-06-2018 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை தலைமை காஜியின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் இவ்வாறே அமைந்துள்ளது.
இந்நிலையில், காயல் அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜூம்ஆப் பள்ளியில் இருந்து எவ்வித அறிவிப்பும் இச்செய்தி வெளியிடப்படும் (இரவு 8.30 மணி) வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்