காயல்பட்டினத்தில் 16-06-2018 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என சுன்னத்துல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் அறிவித்துள்ள நிலையில் , தற்பொழுது காயல்பட்டினம் அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜிதில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது .
இந்த அறிவிப்பின் படி ,15-06-2018 நாளை வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலத்தில் பிறை தென்பட்டதாகப் பெறப்பட்டத் தகவலை உறுதி செய்ததின் அடிப்படையில் இவ்வாறு அறிவிப்பதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்