காயல்பட்டினத்தில் புன்னகை மன்றம் என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுமம் இயங்கி வருகிறது. அக்குழுமத்தின் சார்பில் அவ்வப்போது நலிந்த பிரிவினருக்கும், தேவையுடையோருக்கும் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் வகைகளுக்கு அனுசரணையாளர்களிடம் உதவிகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியில் பயிலும் காயல்பட்டினத்தைச் சார்ந்த ஒரு மாணவர் புன்னகை மன்றத்திடம் கல்விக்கான உதவி தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். மாணவரின் கோரிக்கையை ஏற்று புன்னகை மன்றம் அவருக்கு உதவிட முன் வந்தது.
காயல்பட்டினத்தில் துபில் காம்பளக்ஸில் இயங்கும் ரஹீம்ஸ் இன்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் புன்னகை மன்றம் அணுகி மாணவனுக்கு தேவையான ருபாய் 12,050 ஐ பெற்றது.
இத்தொகையை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களிடம் புன்னகை மன்றத்தின் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
நிலைப்படம் மற்றும் தகவல் : A.L. முஹம்மது நிஜார் , அட்மின் , புன்னகை மன்ற வாட்சப் குழுமம்