காயல்பட்டணம் புதுக்கடை தெருவைச் சார்ந்த *அல்ஹாஜ்ஜா விளக்கு எம்.ஓ.செய்யித் அலீ ஃபாத்திமா* அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அவருக்கு வயது 78.
அன்னார், மர்ஹூம் ‘கண்ணாடி ஆலிம்’ என்ற விளக்கு முஹம்மத் உமர் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மருமகளாரும், ‘ஷாம் ஒலி ஊழியர்’ மர்ஹும் எஸ்.கே.எம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மனைவியும்,கவிஞர் எஸ்.ஏ.நெய்னா, விளக்கு செய்யித் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமான இவர்கள் ,
எம்.எஸ்.முஹம்மத் அலீ சாஹிப், எம்.எஸ் பீர் முஹம்மத், ‘கவிமகன்’ எம்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் ஏ.எல்.செய்யித் மொகுதூம், கே.வி.ஏ.டீ.கபீர், ‘சோல்ஜர்’ எஸ்.ஏ.சதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், எஸ்.எம்.முஹம்மத் உமர், எஸ்.எம்.அஹ்மத் லெப்பை, கே.வி.அஹ்மத் தாஹிர், கே.வி.அம்ஜத் சதகத்துல்லாஹ், கே.வி.கே. ஹமீத் ஷாஹ் ஹரீஸ் ஆகியோரின் கம்மாவும் , எம்.ஏ.முஹம்மத் சதக்கத்துல்லாஹ், ஏ.கே.முஹம்மத் சதக்கத்துல்லாஹ் ஆகியோரின் வாபிச்சாவும் ஆவார்கள். .
அன்னாரின் ஜனாஸா, 30.10.2018. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.
தகவல்: ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், D.A.Sc.,