காயல்பட்டினம் புனித மஹ்ழராவில் இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெரு விழா, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரபீயுல் அவ்வல் பிறை 12, 21-11-2018 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
நிகழ்வு நாள் அன்று, முதல் அமர்வாக காலை 7.30 மணியளவில் புனித பர்ஜன்ஜி மௌலிது ஷரீப் இடம்பெறுகிறது .
மாலை அமர்வுக்கு மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் பெருந்தகை மெளலவி அல்ஹாஜ் A.K. முஹம்மது அஸ்பர் ஆலிம் அஸ்ரபி அவர்கள் தலைமையேற்கிறார் .
மஹ்ழரா குர்ஆன் மதரஸாவின் ஆசிரியர் அல்ஹாபிழ் சொளுக்கு M.S. முஹியத்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் அவர்கள் இறைமறை ஓத துவங்கும் இந்நிகழ்ச்சியில் , நம் அகமதில் நிறைந்த அண்ணல் நபிகளாரைப் புகழ்த்தேற்றும் அஹமதுல்லாஹ் பைத் ஓதப்படும் .
மஹ்ழரா நிர்வாகத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் வாவு S. காதர் சாஹிபு B.Com., அவர்கள் ஆற்றும் வரவேற்புரையைத் தொடர்ந்து இடம்பெறும் தலைமை உரையுடன் மாலை அமர்வு நிறைவுப் பெறுகிறது .
இரவு அமர்வின் துவக்கமாக மஹ்ழரா குர்ஆன் மதரஸா மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெறும் .
இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் ஹிப்ளு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர் , மஹ்ழரா அரபிக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மஹ்ழரா குர்ஆன் மதரஸா மாணவர்கள் ஆகியோருக்கு உரிய பரிசுகளை நிகழ்ச்சிக் குழுவின் தலைவர் அல்ஹாஜ் ஸ்டார் M.S.M. அப்துல் காதிர் அவர்கள் வழங்கி சிறப்பிக்கின்றார் .
சென்னை புழலில் அமைந்துள்ள நாஸீருர் ஸுன்னா ஷரீஅத் கல்லூரியின் தலைவர், மெளலானா மெளலவி அல்ஹாஜ் U. முஹம்மது சலீம் ஆலிம் சிராஜி அவர்கள் இந்நிகழ்ச்சியில் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார் .
மஹ்ழரா நிர்வாகத்தின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அல்ஹாஜ் K.M.S. சதக் தம்பி M.Sc., அவர்களின் நன்றியுரைக்குப் பின்னர் ,
குத்பா சிறிய பள்ளியின் கத்தீபு மற்றும் அல் மதரஸத்துல் ஹாமிதிய்யாவின் பேராசிரியர் மெளலவி அல்ஹாபிழ் நஹ்வி S.A.K. முஹம்மது முஹ்யத்தீன் ஆலிம் மஹ்லரி அவர்களின் துஆவுடன் இன்ஷா அல்லாஹ் மாண்பார்ந்த இந்நிகழ்ச்சி நிறைவுபெறும்.
அல்ஹாபிழ் ஊண்டி Z. செய்யது முஹம்மது ஸாலிஹ் B.B.A., அவர்கள் இந்நிகழ்ச்சியினை நெறிப்படுத்துகிறார் .
இறையருளால் நிகழ்ச்சி நனிசிறப்புடன் நடந்தேற இதயமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.
தகவல் : மஹ்ழரா மீலாதுர் ரசூல் விழாக்குழு