காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிர்வாகி வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் அப்துல் காதிர் உடைய தாயார் – எல்.எஃப். வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மத் செய்யித் பீவி ஃபாத்திமா என்ற மம்சீர்மா அவர்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அவருக்கு வயது 72.
அன்னார், மர்ஹூம் செய்யித் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் கம்பல்பக்ஷ் செய்யித் மொகுதூம் அவர்களது மருமகளாரும், மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஹபீப் முஹம்மத் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஜெ.ஏ.ஜலீல், ஜெ.ஏ.லரீஃப், ‘கண்மணி’ எம்.ஐ.ஸாலிஹ் ஆகியோரின் சிறிய தாயாரும், எம்.ஐ.ஷம்சுத்தீன், மர்ஹூம் ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல், எஸ்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும்,
எஸ்.எம்.ஜெ.பாக்கர், எஸ்.எம்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்.எம்.ஜெ.இக்பால், எஸ்.ஏ.முஹம்மத் உமர், எஸ்.ஏ.அப்துல் காதிர், எம்.ஐ.அபுல் ஹஸன், எம்.ஐ.ஹபீப் முஹம்மத், எம்.ஏ.செய்யித் இஸ்மாஈல், எம்.ஏ.ஹபீப் இக்ராம், எம்.எஸ்.முஹம்மத் இக்பால், எம்.எஸ்.அஹ்மத் இஸ்ஃபாக், எஸ்.எம்.எஸ்.ஜிஃப்ரீ, எஸ்.எம்.எஸ்.ரிஃபாஈ ஆகியோரின் கண்ணும்மாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்குப் பின் 8.30 மணிக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லா வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்